என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "குண்டர் சட்டத்தில் கைது"
கோவை:
கோவை குனியமுத்தூர் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்டதாக குறிச்சியை சேர்ந்த ஷாஜகான், ஜி.எம். நகரை சேர்ந்த சுபாஷ், திருப்பூரைச் சேர்ந்த சூர்யா ஆகிய 3 பேரை கடந்த 21-ந் தேதி போலீசார் கைது செய்தனர்.
இவர்கள் மீது சிங்காநல்லூர் பீளமேடு, சரவணம்பட்டி போலீஸ் நிலையங்களிலும் பல்வேறு வழக்குகள் உள்ளன. தொடர்ந்து மூன்று பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய குனியமுத்தூர் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.
இதை ஏற்று 3 பேரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார். அதன் பேரில் 3 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
குள்ளனம்பட்டி:
பழனி அடிவாரம் பகுதியில் கடந்த ஜூன் மாதம் செந்தில்குமார் என்பவரை 4 பேர் கொண்ட கும்பல் வெட்டி படுகொலை செய்தது. இது தொடர்பாக பழனி அடிவாரம் பாட்டாளி தெருவை சேர்ந்த பூபாலன், சவுந்திரபாண்டி, குரும்பபட்டியை சேர்ந்த பாலகிருஷ்ணன், கோபிநாத்துர்கா ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
இவர்கள் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்ததால் குண்டர் தடுப்புச்சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் பரிந்துரைத்தார். அதன்படி 4 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். இதனையடுத்து போலீசார் 4 பேரையும் மதுரை ஜெயிலில் அடைத்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் மற்றும் போலீசார், சிங்காரப்பேட்டை அருகே உள்ள வெள்ளக்குட்டை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சாலையோரம் ஒருவர் மூட்டைகளை அடுக்கி கொண்டிருந்தார்.
இதைப் பார்த்த போலீசார் அங்கு சென்று அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அந்த மூட்டைகளை பிரித்து சோதனை செய்தனர். அதில் 1,050 கிலோ ரேஷன் அரிசி இருந்தது.
இது தொடர்பாக அந்த நபரிடம் விசாரணை நடத்தினர். அதில் அவர் திருவண்ணாமலை மாவட்டம் திருவள்ளுவர் நகரை சேர்ந்த பிச்சாண்டி (வயது 43) என்பதும், ரேஷன் அரிசிகளை கர்நாடக மாநிலத்திற்கு கடத்த முயன்றதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். ரேஷன் அரிசியும் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் பிச்சாண்டி தொடர்ந்து ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதனால் அவரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த், கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் கதிரவனுக்கு பரிந்துரை செய்தார். இதனை ஏற்று பிச்சாண்டியை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க கலெக்டர் உத்தரவிட்டார். அதன்படி பிச்சாண்டி குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்